PGTRB -Today Important Press Release - List of Candidates Called for Certificate Verification
ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை 1 நேரடி நியமனம் 2020-2021 :
2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12022022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன . 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது .
பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணி நாடுநர்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு , அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .
- Tamil
- English
- Mathematics
- Physics
- Zoology
- Commerce
- Economics
- History
- Geography
- Chemistry
- Botany
- Political Science
- Home Science
- Bio chemistry
- Indian Culture
- Physical Education
- Computer Science
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் . தங்களது அழைப்புக் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பட்டியலிடப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள் , ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய Self Attested copies மற்றும் ஆளறிச் சான்றிதழ் ஆகியவற்றினை சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது .
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பத்தாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் , அடுத்தக்கட்ட பணித்தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . விண்ணப்பத்தாரர்கள் 12 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும் , அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் .
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய URL Link https://forms.gle/ZUYC2Ud5wxcapDku6 வழியாக இப்பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது . ஆட்சேபனை / மனு பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிக்கைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
TRB Website Official Link - http://trb.tn.nic.in/
0 Comments