பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - After Corona School Reopen Instructions (SOP)

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - After Corona School Reopen Instructions (SOP)


 

 
நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய அரசின் உத்தரவுகள்  / வழிகாட்டுதல்கள் : ( முழு விவரம் )

✔️மாணவர்கள் உணவு , தண்ணீர் பாட்டில்கள் பரிமாறிக் கொள்வதை தவிர்க்க வேண்டும்
✔️37.2 ° C அல்லது 99 ° F க்கு மேல் உடல் வெப்பநிலை உள்ளவர்கள்  பள்ளி வளாகத்திற்குள் நுழைய தடை
✔️அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்
✔️முகக்கவசம் அணிவது கட்டாயம்
✔️விழிப்புணர்வு சுவரொட்டிகள் வைக்கப்பட வேண்டும்
✔️மாணவர்கள் இருக்கை 6 அடி இடைவெளி அவசியம்
✔️பள்ளிகளில் உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி ( Thermal Scanner ) கட்டாயம் இருக்க வேண்டும்..
✔️ஆசிரியர்கள் / மாணவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும்
✔️மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்

பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த வரைவு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் :

முன்னுரை : அரசாணை ( நிலை ) எண் 344 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM II ) துறை நாள் 10.07.2020- ன் மூலம் பாடநூல்கள் மற்றும் பிற கல்வி சார் பொருட்களை வழங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது . தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை சார்ந்து அரசாணை ( நிலை ) எண் 273 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM 4 ) துறை நாள் 13.08.2020 யில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முறையாக பின்பற்ற வகைசெய்யப்பட்டுள்ளது .

 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள் / ஆசிரியர்கள் / ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் , கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு 5.10.2020 அன்று வெளியிட்டுள்ளது . இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் கோவிட் -19 தொடர்பாக அரசு தற்போது பின்வரும் நிலையான வழிகாட்டு நெறி முறைகளை ( SOP ) வெளியிடுகிறது . 

முதல் கட்டமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் ( அரசால் எடுக்கப்படும் முடிவுக்கு உட்பட்டு ) பாடங்களை முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் . 

ஒரு வகுப்பில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின் , ஒரு தொகுதிக்கு ( Batch ) 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பிரிக்கப்பட வேண்டும் . ஆனால் , சமூக இடைவெளியைப் பின்பற்றி கூடுதலான மாணவர்கள் அமர்ந்து பயில வகுப்பறையில் கூடுதல் இடம் இருந்தால் , கூடுதல் இருக்கைகளை அமைப்பதன் மூலம் அதிக மாணவர்களுக்கு இடமளிக்கலாம் . இதுபோன்ற நிலையில் , இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் , ஒரே நேரத்தில் வெவ்வேறு வகுப்பு அறைகளில் கற்றுக் கொடுக்கப்படலாம் . அதற்கேற்ற வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் . 

1. பொதுவானவை : 

1. இணையவழி / தொலைதுார கற்றல் முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும் . 

2. பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தும்போது , சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் , அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம் . 

3. தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துப்பூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னரே தங்கள் பள்ளிகளை மீள திறக்கலாம் . 

4. பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர் . 

5. பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கப்படலாம் . 

6. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது , அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும் . 

7. அத்தகைய மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்திற்கு தக்க முறையில் திட்டமிடப்பட வேண்டும் . 

8. அனைத்து மாணவர்களும் , ஆசிரியர்களும் / பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் . 

9. அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் துத்தநாக ( Zinc ) மாத்திரைகள் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் . 

10.பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்போது , அரசால் வெளியிடப்படும் இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ( SOP ) கட்டாயமாக பின்பற்ற வேண்டும் . 


II . பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள் : 

அ . முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கிருமிநீக்கம் செய்தல் : 

1. பள்ளிகளை திறப்பதற்கு முன்பு , 1 % சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசல் தெளித்து ஏற்கனவே அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிவளாகம் மற்றும் தளவாட பொருட்கள் , கைப்பிடிகள் , கதவுகள் , ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யவேண்டும் . 

2. கைகளை சுத்தம் செய்வதற்கு மிகச்சரியான முறையில் சோப்பினை கொண்டு குழாய்களில் ஓடும் நீரில் நன்கு கழுவுதல் வேண்டும் என்பதால் கை கழுவும் வசதிகள் போதுமான அளவில் செய்யப்பட வேண்டும் . இத்துடன் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள , அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி ( Hand Sanitizer ) பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் . 

3. பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் , ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி / சோப்புகள் வைக்கப்பட்டு கை கழுவும் வசதிகள் செய்யப்படவேண்டும் . 

4. உடல்வெப்ப பரிசோதனைக் கருவிகள் ( Thermal Scanner ) , கிருமிநாசினிகள் , சோப்புகள் , பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் ( Pulse Oximeter ) போன்ற பொருட்கள் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் . 

5. பொது இடங்கள் சுத்தம் செய்வது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் அரசின் வழிகாட்டுதல்களை சுற்றறிக்கை வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் / சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி அவர்களை தொடர்பு கொண்டு துாய்மையாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . 

6.கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக பராமரிக்கப்படுதல் வேண்டும் . மக்கள் வரக்கூடிய இடங்களில் கை கழுவும் பகுதிகள் , கழிப்பறைகள் போன்றவை முறையாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்தமாக வைக்கப்பட வேண்டும் . 

7. பெருந் தொற்றின் காரணமாக ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கான தொட்டுணர் வருகை பதிவிற்கு ( Biometric ) பதிலாக , பள்ளி நிர்வாகத்தால் தற்காலிக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் . 

8. பள்ளிகளில் ஏதேனும் அவசர காலங்களில் ஆசிரியர்கள் / மாணவர்கள் / பணியாளர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக மாநில அரசின் அவசர உதவி எண் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் , நடமாடும் மருத்துவ குழுக்களின் தொலைபேசி எண்கள் போன்றவற்றை பார்வையில் படக்கூடிய இடங்களில் வைக்கவேண்டும் . 

9. இந்த தரநிலைகளின்படி ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் , தங்கள் பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்க வேண்டும் 


ஆ . சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் : 

1. அனைத்து வேலை நாட்களிலும் , பள்ளி நுழைவு வாயிலிலும் பள்ளி வளாகத்திலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் . 

2. பள்ளியில் அனுமதிக்கக்கூடாது . மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சுற்றித் திரிய 

3. மாணவர்கள் / ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுதும் மற்றும் பள்ளியை விட்டு புறப்படும் நேரத்திலும் , சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் வரிசையில் பின்பற்ற வேண்டும் . நுழைவுவாயில் மற்றும் பள்ளிக்குள் நிற்கும்போதும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற / பராமரிக்க வேண்டும் . 

4. கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறைவணக்க கூட்டம் , விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் . நீச்சல் குளங்கள் பள்ளிகளில் இருப்பினும் மூடப்பட வேண்டும் . 

5.உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கான பாடவேளைகள் அனுமதிக்கப்படாது . நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை ( NCC , NSS ) நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது . 

6.வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகைபுரிதல் மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றிற்கு வெவ்வேறு நேரத்தை நிர்ணயிக்கலாம் . 

7. சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டு வருவதற்கும் செல்வதற்கும் பள்ளிகளில் வெவ்வேறு பாதைகளை பயன்படுத்த வேண்டும் . 

8. பள்ளிக்குள் மாணவர்கள் நுழையும் மற்றும் வெளியேறும் நேரத்தில் , அனைத்து வாயில்களும் திறந்து வைக்கப்பட வேண்டும் . பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருப்பின் ஒவ்வொரு வாயிலையும் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு ஒதுக்கினால் கூட்டத்தை தவிர்க்க முடியும் . 

9. வரிசையில் செல்லும்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான இடங்களில் வட்டம் / கட்டம் போன்ற குறியீடுகளை தரையில் வரைந்து வைக்க வேண்டும் . 

10. கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் / கட்டுப்பாட்டு காலம் முடிந்த பிறகு அல்லது கட்டுப்பாட்டு மண்டலம் இல்லை என அறிவிக்கப்பட்ட பின்னரே பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் . கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவாகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க ஆசிரியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இணையவழி / மாற்றுவழியில் கற்பிக்கலாம் . 

11. வகுப்பறைகளில் இருக்கை ஏற்பாடு செய்யும்போது குறைந்தபட்சம் இருக்கைகளுக்கு இடையே 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும் . 

12. ஆசிரியர் அறைகள் , அலுவலகப் பகுதிகள் வரவேற்புப் பகுதிகள் உட்பட ) மற்றும் பிற இடங்களிலும் முறையான சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் . 

13. வானிலையைப் பொறுத்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளையும் கருத்தில் கொண்டு , ஆசிரியர் மாணவர் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக வகுப்பறைக்கு வெளியேயுள்ள இடங்களையும் பயன்படுத்தலாம் . 

14. வகுப்பறைகள் , நுாலகங்கள் , கழிவறைகள் , கை கழுவும் இடங்கள் , குடிநீர் பகுதிகள் , பள்ளி சமையலறை , அரங்குகள் , பேருந்துகள் / வண்டிகள் நிறுத்துமிடம் , நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் வழிகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவதை நினைவுபடுத்தும் வகையில் சுவரொட்டிகள் , குறியீடுகள் போன்றவை வைக்கப்படவேண்டும் . 


இ . கோவிட் -19 தொடர்பான விளைவுகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான வழிகளை உணர்ந்து செயல்பட மாணவர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , சமூக உறுப்பினர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் : 

1. பள்ளிகளை மீளத் திறப்பதற்கு முன்பு , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பணியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு இணையவழி / நேரடி முறைகள் , துண்டுப்பிரசுரங்கள் , கடிதங்கள் , கிராமங்கள் மற்றும் நகர்ப்புறத்தில் வார்டு அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் கோவிட் 19 நோய்த்தன்மையை அதற்கேற்ப உணர்ந்து செயல்படுவதற்கான பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் 

  • கை சுகாதாரம் , சுவாச சுகாதாரம் மற்றும் அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்தல் உள்ளிட்ட தேவையான செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகளாவன . 
  • சமூக இடைவெளியை கடைபிடித்தல் 
  • கோவிட் -19 ஐத் தடுக்க தேவையான சுகாதாரமான நடைமுறைகள் 
  • கோவிட் 19 பற்றிய தவறான கருத்துக்கள் 
  • காய்ச்சலை கண்டறிதலுக்கான உடல் வெப்பநிலை பரிசோதனை 
  • அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்தல் மற்றும் தேவையான மருத்தவ உதவியைப் பெறுதல் 

2 . கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் வரும் பகுதிகளுக்கோ அல்லது கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நபாகளின் வீடுகளுக்கோ செல்ல வேண்டாம் என்று மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் . 

3. தனி மனித சுகாதாரம் , தனி மனித ஆரோக்கியம் மற்றும் துாய்மையான சீருடையின் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் . மேலும் இந்த தகவல்கள் கடிதங்கள் , மின்னஞ்சல்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு சமூக ஊடகம் மூலமாகவோ முன்கூட்டியே அனுப்ப வேண்டும் . 

4. குழந்தை அல்லது அவர்கள் வீட்டில் வசிக்கும் எந்தவொரு குடும்ப உறுப்பினரும் காய்ச்சல் / இருமல் / மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்பதை பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் . இதேபோல் , மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் குழந்தைகள் அவர்களின் மருத்துவ பயிற்சியாளர்களால் அறிவுறுத்தப்பட்டபடி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . 

5.கோவிட் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது . ஆனால் காலதாமதமின்றி தேவையான சோதனைகள் மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளுதல் மற்றும் வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் . 

III . பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகள் : 

அ . மாணவர்கள் / பணியாளர்களின் உடல்நல விவரக்குறிப்பு மற்றும் அவர்களின் உட டல்நலத்தை ஆய்வு செய்தல் :

 1. பள்ளிகளை மீண்டும் திறக்கும்போது , முதல் நடவடிக்கையாக அவர்களின் உடல்நலனை ஆய்வு செய்து , மாணவர்கள் / பணியாளர்களைப் பற்றிய சுகாதார விவரக்குறிப்பு தயாரிக்க வேண்டும் . மாணவாகள் , ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களிடமிருந்து ( சுகாதார விவரக்குறிப்பு ) அவர்களின் உடல்நிலை குறித்த சுய விவர படிவத்தினை சேகரிக்க வேண்டும் . மருத்துவ குழுவினரைக் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய்கள் / உடல்நலமின்மை / இணை நோய்களுக்கான சுகாதார பரிசோதனைக்கும் , உடல்நல ஆய்வுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும் . ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் , தேவையான சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அவர்களை பரிந்துரைக்கலாம் . 

2. மாணவர்கள் / பணியாளர்களின் சுகாதார தன்விவரக்குறிப்பு உருவாக்கல் மற்றும் ஆய்வுசெய்தல் போன்ற பணிகளை , பள்ளி திறந்த உடன் தொடங்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் . மேலும் , இணையவழி வகுப்புகள் ஏற்பாடு செய்ய மாணவர்களிடம் உள்ள இணைய சாதனங்கள் தொடர்பான தகவல்களைப் அதற்குரிய படிவத்தில் பெறலாம் . இணை நோயுறு நிலைமைகளை ( co - morbidity condition ) கொண்ட மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் மாற்று / இணையவழியின் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படலாம் . 

3. நோய்தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ள அனைத்து பணியாளர்களும் , அதாவது வயதான பணியாளர்கள் , கர்ப்பிணி பெண்கள் மற்றும் மற்ற நோய்க்கான சிகிச்சை மேற்கொள்பவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படலாம் . மாணவர்களுடன் நேரடி தொடர்பு தேவைப்படும் எந்தவொரு பணிக்கும் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது . 

4. சிறப்பு கவனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் அனைவரும் எளிதில் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள் என கருதப்படுவதால் , அவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் . இந்த மாணவர்களை இணையவழி / மாற்று வழி கற்றல் முறையில் ஈடுபடுத்தலாம் . 

5. பள்ளிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களால் கோவிட் -19 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை மேற்பார்வையிடும் பணிக்கு ஒவ்வொரு பள்ளியும் ஒரு பொறுப்பாளரை ஒதுக்க வேண்டும் . கோவிட் தொடர்பான இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் அவர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் . 

ஆ . முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தினசரி கிருமிநாசினி உபயோகித்தல் : 

1.பள்ளி வளாகத்தில் உள்ள தளவாட பொருட்கள் , கைப்பிடிகள் , கதவுகள் , ஜன்னல்கள் போன்றவை குறிப்பாக அடிக்கடி தொடக்கூடிய பகுதிகளான கதவு கைப்பிடிகள் , தாழ்ப்பாள்கள் போன்றவை 1 % சோடியம் ஹைப்போகுளோரைட் கரைசலால் தினமும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் . மாணவர்கள் மாலையில் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு இது சார்ந்து அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . இதற்கான அரசுப் பள்ளிகளுக்கான செலவினம் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் . 

2.உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாணவர்கள் எந்தவொரு தூய்மை செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்தக்கூடாது . 

3. கற்பித்தல் துணைக்கருவிகள் , விளையாட்டுப் பொருட்கள் , ஊஞ்சல்கள் , மேசைகள் , நாற்காலிகள் , கணினிகள் , அச்சுப்பொறிகள் , மடிக்கணினிகள் , டேப்லெட்டுகள் போன்ற அனைத்து கற்பித்தல் கற்றல் பொருட்களும் குறிப்பாக அடிக்கடி தொடக்கூடிய மேற்பரப்புகள் / பொருள்கள் மீது முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும் . 

4. அனைத்து குப்பைகளையும் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் . பள்ளி வளாகத்தில் வேறு எங்கும் குப்பைகள் குவிக்க அனுமதிக்கக்கூடாது . 

5. அனைத்து குப்பைத்தொட்டிகளையும் சுத்தம் செய்து சரியாக மூடி வைக்க வேண்டும் . முறையான நெறிமுறைகளை கடைபிடித்து கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும் . 

6. சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி திட்டமிட்ட நெறிமுறையின்படி அனைத்து மாணவர்களுக்கும் , பணியாளர்களுக்கும் முறையான காலஇடைவெளியில் கை கழுவும் வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் . கை கழுவும் நேரம் குறைந்தபட்சம் 40 வினாடிகள் இருக்க வேண்டும் . 

7. மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் . மாணவர்கள் தண்ணீர்பாட்டில்களை கொண்டு வருவது ஊக்குவிக்கப்படுதல் வேண்டும் . 

8. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சோப்பு / கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்பே பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் . பள்ளிகளின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்களிலும் , தேவைப்படும் இடங்களிலும் சோப்பு மற்றும் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதை உரிய பொறுப்பாளரால் கண்காணிக்கப்பட வேண்டும் . 

9. பள்ளிகளை துய்மைப்படுத்தும் பணிகளை எந்தவித சுணக்கமுன்றி செயல்படுத்திடும் பொருட்டு பொது இடங்களை துாய்மைப்படுத்துதல் தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகள் உள்ளாட்சி அமைப்புகள் / சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவேண்டும் .

10. மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் , கைகழுவும் இடங்கள் போன்றவை முறையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் . அப்பகுதிகளில் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் . 

11. குளிர் சாதனங்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்தல் வேண்டும் . தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி குளிர் சாதனங்களின் வெப்பநிலை அமைப்பு 24-30 ° C வரம்பிலும் ஒப்புமை ஈரப்பதம் 40-70 % வரம்பில் இருக்க வேண்டும் . முடிந்தவரை தூய்மையான வெளிக்காற்றை சுவாசிக்கும் வகையில் இருக்க வேண்டும் மற்றும் காற்றோட்டம் போதுமானதாக இருக்க வேண்டும் . 50 % க்கும் அதிகமாக தூய காற்று இருக்கும் வகையில் புதிய / சுத்திகரிக்கப்பட்ட காற்று , சுழற்சி முறையில் அனுமதிக்குமாறு காற்று சுழற்சி அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் . 

12. பள்ளி வளாகத்திற்குள்ளோ அல்லது நுழைவு வாயில் அல்லது வெளியேறும் வழி அருகிலோ உணவுப் பொருட்களை விற்க வெளிவிற்பனையாளர்களை அனுமதிக்கக்கூடாது . 


இ . பெருந்தொற்றினை தடுப்பதற்கான சமூக ஒழுங்குகள் : 

1. அனைத்து ஆசிரியர்கள் , மாணவர்கள் , பணியாளர்கள் துாய்மையான முக கவசங்களை பயன்படுத்தப்படுவதை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 1 முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் . 

2. பள்ளி வளாகத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் . முகக் கவசங்களை அடிக்கடி தொடுவது தவிர்க்கப்பட வேண்டும் . 

3. தாங்கள் பயன்படுத்தும் முகக் கவசங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் . 

4. முகம் அல்லது முகத்தின் எந்த பகுதியையும் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் . 

5. தளவாடங்கள் / சாதனங்கள் / மின்துாக்கி / கைப்பிடிகள் மற்றும் பிற அமைப்புகளின் மேற்பரப்பை அடிக்கடி தொடுவது தவிர்க்கப்பட வேண்டும் . 

6.கழுவும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் எச்சில் உமிழ்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும் . எச்சில் உமிழ்ந்தவுடன் ஓடும் நீரில் கழுவ வேண்டும் . 

7. சுவாச ஒழுங்குமுறை அதாவது ஒருவர் இருமும் போதும் / தும்மும் போதும் அவரின் வாய் மற்றும் மூக்கை ஒரு மெல்லிழைத்தாள் / கைக்குட்டை / முழங்கையால் மூடுவதை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் . அவ்வாறு பயன்படுத்தப்பட்ட மெல்லிழைத் தாள்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் . 

8. மேற்கண்ட செயல்கள் அனைத்தும் மாணவர்களால் பின்பற்றப்படுவதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் . 

9. மாணவர்கள் உடல்நலனை தாமாக கண்காணித்தல் மற்றும் எந்தவொரு உடல்நலக் குறைவையும் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும் . 

10.நோய்தொற்று அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு மாணவர் / ஆசிரியர் / தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு பணியாளர்கள் உடனடியாக அனுப்பப்படுவார்கள் . நோய் உறுதி செய்யப்பட்டால் , அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்படுவார்கள் . இதுபோன்ற நிகழ்வுகளில் , நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் தங்கள் உடல்நிலையை தாமாகவே கண்காணிப்பதற்காக வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் . 


ஈ . பள்ளிகளில் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் :

 1. மாணவர்கள் / பணியாளர்கள் / ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பள்ளிக்கு வரும்போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் . 

2. மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து போதுமான அளவு உடல்வெப்பநிலை அறியும் கருவிகள் , போதுமான எண்ணிக்கையிலான AAA செல்கள் மற்றும் சுத்தமான துணி ஆகியவை தயாராக வைக்கப்பட வேண்டும் . இப்பணிகள் இதற்கென நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களால் கண்காணிக்கப்படும் .

3. ஒவ்வொரு நாளும் உடல்வெப்பநிலை அறியும் கருவிகள் ( Thermal Scanner ) செயல்படுகின்றனவா என்பதை தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் சரிபார்க்க வேண்டும் . 

4. பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும் . அமைந்துள்ள உள்கட்டமைப்புக்கு உட்பட்டு , பள்ளிக்கு வருபவர்கள் சமூக இடைவெளிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி வரிசையில் காத்திருப்பது விரும்பத்தக்கது . மேற்கூரைகளால் மூடப்பட்ட பகுதிகள் அல்லது தாழ்வாரம் போன்ற நிழல் பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தரையில் சரியான வட்டம் / சதுரம் போன்ற குறியீடுகள் செய்யப்பட வேண்டும் . 

5. தொடுதல் இல்லாத உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியை கையாளும் நபர் , அதனைக் கையாளும் முன் கைகளைக் கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும் . அந்த பணியாளர் பயன்பாட்டு வழிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் . 

6 . உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி ( Thermal Scanner ) பயன்படுத்துவதற்கு முன்பு , அதைக் கையாளும் நபர் அதில் உள்ள அகச்சிவப்பு சென்சார் லென்ஸை உற்று நோக்க வேண்டும் . அழுக்காக இருந்தால் , அதை சுத்தம் செய்ய வேண்டும் . இதனால் அந்த கருவி சரியாக வேலை செய்யும் . லென்ஸை சுத்தம் செய்ய , ஈரமான துணியைக் கொண்டு மெதுவாக துடைக்க வேண்டும் . மற்ற வகை வேதிப் பொருட்களை பயன்படுத்தவோ அல்லது விரல்களால் லென்ஸை தொடவோ கூடாது . 

7. நோய் பரவுவதைத் தடுக்க , ஒருவரின் உடலை வெப்பநிலை பரிசோதிக்கும் கருவியால் ( Thermal Scanner ) நேரடியாக தொடுவதை தவிர்க்கவும் . 

8. ஒவ்வொரு நாளும் , பயன்பாட்டிற்குப் பிறகு , சுத்தமாக துடைத்து உலரச் செய்து அடுத்த முறை பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைக்க வேண்டும் . 

9. ஒவ்வொரு நாளும் முதல் பயன்பாட்டிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியின் செயல்பாடு சரிபார்க்கப்பட வேண்டும் . ஸ்கேனரின் செல்களில் மின்சக்தி இல்லை எனில் அவற்றிக்கு உடனடியாக செல்கள் மாற்றப்பட வேண்டும் . ஸ்கேனரை இயக்கும் நபர் கூடுதல் செல்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் . 

10. பொதுவாக சராசரி உடல் வெப்பநிலை 98.6 ° F ( 37 ° C ) ஆக இருக்கும் . சில ஆய்வுகள் " சாதாரண " உடல் வெப்பநிலை 97 ° F ( 36.1 ° C ) முதல் 99 ° F ( 37.2 ° C ) வரை அளவில் இருக்கும் என்று காட்டுகின்றன . எனவே 37.2 ° C அல்லது 99 ° F க்கு மேல் வெப்பநிலை காணப்படும் நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதைத் தடைசெய்யப்படுவதுடன் , அருகிலுள்ள சுகாதார மையம் 1 அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படவேண்டும் . 

11. மாணவர்கள் / பணியாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யும் போது , இருமல் , சளி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிற அறிகுறிகளும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தல் வேண்டும் . 

12. மேலேயுள்ள அறிகுறிகளுடன் காணப்படும் மாணவர்கள் / பணியாளர்களின் ஆக்ஸிஜன் ( 02 ) அளவைக் கண்டறிய பள்ளிகளில் ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வைக்கப்பட்டிருக்க வேண்டும் . 


உ . வகுப்பறைகள் மற்றும் பிற இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் :

 1. பள்ளி வளாகத்திற்குள்ளும் வெளியேயும் கூட்ட நெரிசல்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் . 

2. மாணவர்கள் அவர்களுக்கென குறிக்கப்பட்ட / ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்யவதோடு வகுப்பறைகள் , ஆய்வகங்கள் , நுாலகங்கள் , விளையாட்டு மைதானம் அல்லது பள்ளி வளாகத்தின் வேறு எந்த பகுயிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் முகக் கவசங்களை அணிவதை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் . 

3. சமூக இடைவெளியை கடைபிடித்து சிறிய குழுக்களாக ஆய்வகங்களில் செய்முறை சோதனைகள் செய்யப்பட வேண்டும் . 

4. எந்தவொரு பொருளையும் ( பாடப்புத்தகங்கள் , குறிப்பேடுகள் , பேனா , பென்சில் , அழிப்பான் , உணவு , தண்ணீர் பாட்டில்கள் போன்றவை ) மாணவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதை ஊக்கவிக்கக்கூடாது . தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் . 

5. வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு இடைவேளை நேரம் வழங்கப்படுதல் வேண்டும் . 

6. மாணவர்களுக்கு இடையே உணவுப் பகிர்வு அனுமதிக்கப்படக்கூடாது . 

7. பள்ளியில் சத்துணவு சாப்பிடாத மாணவர்கள் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டு வந்து சாப்பிடுவதை ஊக்குவிக்க வேண்டும் . 

8. காற்றோட்டத்திற்காக வகுப்பறைகள் மற்றும் பிற அறைகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் . 

9. மின்துாக்கி மற்றும் நடைபாதைகளில் செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் . ஒரு படி விட்டு மறுபடியில் செல்லும் வகையில் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கப்பட வேண்டும் . 

10. கழிவறைகளில் அதிக கூட்டத்தைத் தவிர்ப்பதற்கு குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் . 

11. மாணவர்கள் மதிய உணவு / சிற்றுண்டிக்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு முறையும் , அவர்கள் கழிவறை மற்றும் வேறு எந்த வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் கைகளை கழுவ ஊக்குவிக்கப்பட வேண்டும் . 70 % ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினி ஒரு மாற்றாக பயன்படுத்தலாம் . 


ஊ . உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் / பிற ஆய்வகங்களில் பயிற்சி நடத்துதல் :

 1. ஆய்வகப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு , சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இட அளவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு அமர்வுக்கு அதிகப்பட்சம் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு அதற்கேற்றவாறு செயல்படுத்தப்படல் வேண்டும் .

2. உபகரணங்களின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன்னும் பின்னும் , அடிக்கடி தொடக்கூடிய உபகரணங்களின் மேற்பரப்புகள் ஆகியவை கிருமி நீக்கம் செய்யப்படுதல் அவசியம் . 

3. உபகரணங்கள் உபயோகிக்கும் பணி இடங்களில் பணிபுரிய ஒரு நபருக்கு 4 சதுர மீட்டர் பரப்பளவு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் . 

4. அனைத்து ஊழியர்களும் / மாணவர்களும் பயிற்சி உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு துாய்மைப்படுத்திக் கொள்ள ஏதுவாக பணிஇடங்கள் / ஹைடெக் ஆய்வகங்கள் போன்றவற்றில் கிருமி நாசினி ( Hand Sanitizers ) வழங்கப்பட வேண்டும் . 


எ. ஒரு மாணவர் / ஆசிரியர் / பணியாளர்களுக்கு நோய் அறிகுறிகள் உண்டானால் ( காய்ச்சல் , இருமல் , மூச்சு விடுவதில் சிரமம் ) பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் :

 1. அனைத்து தலைமை ஆசிரியர்களும் / ஆசிரியர்களும் எந்தவொரு அவசர உதவிக்கும் சுகாதார நிலையத்தின் அவசர தொடர்பு எண்ணை தயாராக வைத்திருக்க வேண்டும் . 

2. நோய்வாய்ப்பட்ட நபரை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையிலோ அல்லது பகுதியிலோ வைக்க வேண்டும் . நோய்த் தொற்று இருக்கலாம் என அவர்களின் பெற்றோர்கள் / பாதுகாவலர்களுக்கு தெரிவிப்பதுடன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவ நிலையத்திற்கு கோவிட் சோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . 

3.ஒரு மருத்துவர் / சுகாதார ஊழியரால் பரிசோதிக்கப்படும் வரை நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்துகொண்டு இருக்க அறிவுறுத்தப்பட வேண்டும் . 

4.பொது சுகாதார அதிகாரியாலோ அல்லது மருத்துவ பணியாளராலோ நோயின் தன்மை மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான சிகிச்சை , அவர்களின் தொடர்பினை கண்டறிதல் , கிருமி நீக்கம் செய்தல் போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் . 

5.ஒரு நபர் நோய்த்தொற்றுடன் காணப்பட்டால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் . 

6. பள்ளி / விடுதியில் ஒரு நபர் நோய்த்தொற்றுடன் கண்டறியப்பட்டால் அந்த மாணவர் / பணியாளர்கள் மூலம் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் . அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பொருத்தமான மேல்நடவடிக்கைகளுக்காக மாநில / மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுகாதார கண்காணிக்கப்படுவர் . 

7. நோய்த்தொற்று கண்டறியப்பட்ட மாணவர் அல்லது நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் கண்காணிப்புக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் . 


ஏ . பிற அறிவுரைகள் :

1. பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாணவர்கள் கட்டாயமாக தங்கள் அடையாள அட்டையை எல்லா நேரங்களிலும் அணிந்திருத்தல் வேண்டும் . 

2. பள்ளி வளாகத்திற்குள் எந்தவொரு கூட்டத்தையும் கூட்டக்கூடாது என்று பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாணவர்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட வேண்டும் . 

3.நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள அனைத்து பணியாளர்களும் , அதாவது வயதான பணியாளர்கள் , கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோய்கான சிகிச்சை மேற்கொள்பவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட வேண்டும் . மாணவர்களுடன் நேரடி தொடர்பு தேவைப்படும் எந்தவொரு பணிக்கும் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது

4. அனைத்து பணியாளர்களுக்கும் / மாணவாகளுக்கும் கோவிட் தடுப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் . 

5. பள்ளியில் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு தலைமை ஆசிரியர் / முதல்வர் பொறுப்பேற்பதோடு பணியாளர்கள் / மாணவர்கள் முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் . 

6. போதுமான அளவு மூடப்பட்ட குப்பைத் தொட்டிகள் மற்றும் குப்பைத் போடும் பைகள் இருப்பது உறுதி செய்யப்படுவதுடன் , பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்புப் பொருட்கள் மற்றும் பொதுக் கழிவுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முறையாக அகற்றுவதற்கான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் . கழிவு மேலாண்மை மற்றும் அகற்றுவதற்கான விதிமுறைகள் குறித்து பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகவல் மற்றும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் . 

7.பள்ளிகளுக்குள் தேவையற்ற பார்வையாளர்களின் நுழைவு கண்டிப்பாக தடைசெய்யப்பட வேண்டும் . 

8.மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி பள்ளியால் செய்யப்படும் நேர்வுகளில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் . வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM II ) துறையால் 06.06.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணை ( நிலை ) எண் .279 - ல் , தனியார் பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ( SOP ) 1 % சோடியம் ஹைபோகுளோரைடு கொண்டு வாகனங்களை தூய்மைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் . 

9. ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலஇடர்பாடுகள் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் . 

10. ஆசிரியர்கள் , பள்ளி ஆலோசகர்கள் மற்றும் பள்ளி துாய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் உணர்வு நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பினை ( Emotional Safety ) உறுதி செய்ய வேண்டும் . 

11. பள்ளிகளில் அவசர சிகிச்சை குழு அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆதரவு குழு , உணவுப் பொருட்கள் அளிக்கும் குழு , சுகாதார ஆய்வுக் குழு போன்ற பணிக்குழுக்கள் குறிப்பிட்ட பணிகளை செய்யும் வகையில் உருவாக்கப்படலாம் . 

12. இந்த பணிக்குழுக்களின் உறுப்பினர்களாக இருப்பதற்கான ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கண்டறியப்பட்டு திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்க பயன்படுத்தலாம் . 

13. மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை கவனித்துக்கொள்வதற்கு பள்ளியில் அல்லது தொடர்பு கொள்ளக்கூடிய துாரத்தில் முழுநேர பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர் / செவிலியர் / மருத்துவர் மற்றும் ஆலோசகர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . 

14. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கமான உடல்நல ஆய்வுகள் ( Regular Health Checkups ) பள்ளிகளால் ஏற்பாடு செய்யப்படலாம் . 

15. பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் / பணியாளர்களின் உடல்நல பரிசோதனைக்காகவும் மற்றும் பள்ளிகள் திறந்த பின்னர் தொடர்ந்து உடல்பரிசோதனைகள் செய்யவும் சுகாரத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் . 

16. பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப விரைவாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒன்றிய அளவில் நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதாரத் துறை ஏற்படுத்த வேண்டும் 

17. நடமாடும் மருத்துவ குழுக்களின் தொடர்பு எண்கள் பள்ளிகளில் தெரியும் வண்ணம் எழுதி வைக்கப்பட்டிருக்க வேண்டும் . 

18. துண்டுப்பிரசுரங்களை வழங்குவதன் மூலம் கோவிட் 19 தொற்றுநோய் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து

பள்ளி மாணவர்கள் / பணியாளர்களிடையே விழிப்புணர்வை சுகாதாரத்துறை ஏற்படுத்த வேண்டும் . 

19. மாணவர்கள் மிதிவண்டி மூலம் பள்ளிகளுக்கு வருவதற்கும் அல்லது மாணவர்களை பள்ளிகளில் விடுவதற்கும் அழைத்துச் செல்வதற்கும் பெற்றோர்கள் வருவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் . 


IV . அனைத்து தனியார் பள்ளி விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் : 

1.விடுதியில் தங்கும் மாணவர்களிடையே தற்காலிக தடுப்புகள் அமைக்கப்படலாம் . 

2. விடுதிகளில் சமூக இடைவெளியை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் . முக்கிய இடங்களில் குறியீடுகள் எழுதி வைப்பது போன்றவை கண்டிப்பாக இருக்க வேண்டும் . 

3.தேவை ஏற்படின் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் . 

4.தங்கும் ஒவ்வொரு நபரையும் அவர்கள் விடுதியில் தங்க அனுமதிப்படுவதற்கு தொடங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் . நோய் தொற்று அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே விடுதியில் தங்க அனுமதிக்க வேண்டும் . 

5.பேருந்துகள் , ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தி மாணவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து விடுதிக்கு வருவதால் , அவர்கள் விடுதிக்கு வந்தவுடன் மற்றவர்களுடனான தொடர்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும் . அவர்களின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் . 

6.மாணவர்களின் மன அல்லது உணர்வுகளை சார்ந்த பிரச்சினைகளை கவனித்துக்கொள்வதற்கு ஆலோசகர் / ஆசிரியர் முறையாக வருவதை உறுதி செய்யப்பட வேண்டும் . 

7.உடல்நலன் பரிசோதனை செய்யப்பட்ட அத்தியாவசிய ஊழியர்களைத் தவிர மற்ற ஊழியர்கள் எவரும் விடுதியில் இருத்தல் கூடாது . 

8. சமையலறை மற்றும் உணவு உண்ணும் இடங்களை தூய்மையாக பராமரிப்பதை உறுதி செய்ய உரிய அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு முறையாவது ஆய்வு செய்யவேண்டும் . 

9. ஊழியர்கள் சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் , சுகாதாரம் மற்றும் உடல்நலம் , சுத்தமான மற்றும் சத்தான உணவு போன்றவற்றை விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கு ஏற்பாடு செய்யக்கூடிய திறனை வளர்ப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் . 

10.மேற்கூறியவற்றுடன் தனியார் நிர்வாகங்களால் பராமரிக்கப்படும் விடுதிகளை பராமரிப்பதற்கான அரசாணை ( நிலை ) எண் .279 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DMII ) துறையின் 06.06.2020 தேதியிட்ட அரசாணை மூலம் வழங்கிய ( SOP ) நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து விடுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் . பல்வேறு துறைகளால் நடத்தப்படும் விடுதிகளும் அந்தந்த துறைகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் . 

Post a Comment

0 Comments