PG TRB - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் கால அட்டவணை !!

PG TRB - முதுகலை ஆசிரியர் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் கால அட்டவணை !!

                                  


2020-2021ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் . 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது . அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித்தேர்வுகள் ( Computer Based Examination ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04,07-2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன . 25.08.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 26.08.2022 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது .

                 17 பாடங்களுக்கு 12 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது . இப்பணி நாடுநர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 02.09.2022 முதல் 04.09.2022 வரை நடைபெற உள்ளது . அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கான பாடவாரியான கால அட்டவணை பின்வருமாறு

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் கால அட்டவணை :



                  மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை , ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது . சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணி நாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் , 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் . தங்களது அழைப்புக் கடிதத்தினை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக பணி நாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . பணிநாடுநர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 

             சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் அடுத்தக்கட்ட பணித்தெரிவிற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது . விண்ணப்பதாரர்கள் 1 : 2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும் , அவர்களின் சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதித் தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . வளாகத்தின் வாசலில் கூட்டமாக சேர்வதை தவிர்த்து வளாகத்திற்குள் அமைதி காத்திடவும் தெரிவிக்கப்படுகிறது . 

 சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருகைபுரியும் பணிநாடுநர்கள் :

  • அசல் கல்வி சான்றிதழ்கள் , 
  • முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள்,
  • அசல் ஆதார் அட்டை , மற்றும் இச்சான்றிதழ்களின் 1 செட் ஜெராக்ஸ் நகல்கள் ( சுய சான்றொப்பம் இடப்பட்டது ) 
  • அழைப்புக் கடிதம் 
  • மற்றும் விண்ணப்ப நகல் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவருதல் வேண்டும் . 

செல்போன்கள் , பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது . கொண்டுவரும் பொருட்களின் பாதுகாப்பிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது . வளாகத்திற்குள் பெற்றோர்கள் , சிறார்கள் மற்றும் உறவினர்களை அழைத்து வரக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது . மேலும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் மற்றும் பத்திரிகைச் செய்தியினை தொடர்ந்து கவனித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Post a Comment

0 Comments