Polytechnic TRB Exam Admit Card Download - ( www.trb.tn.nic.in ) ஆசிரியர் தேர்வு வாரியம் !

Polytechnic TRB Exam Admit Card Download - ( www.trb.tn.nic.in ) ஆசிரியர் தேர்வு வாரியம் !

Polytechnic TRB Exam Admit Card Download :

2017-2018 ஆம் ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக் கல்லுாரி விரிவுரையாளருக்கான தேர்வு 28.10.2021 , 29.10.2021 , 30.10.2021 மற்றும் 31.10.2021 தேதிகளில் ( காலை / மதியம் ) நடைபெற உள்ளது . இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதி சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து 22.10.2021 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை Printout எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் ( Reporting Time ) மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் ( Original Identity Card ) விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் ( Original Passport Size Photograph ) தவறாமல் எடுத்து வர வேண்டும் . 

Polytechnic TRB Exam - Computer Based Examination :

தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும் , பிற்பகல் தேர்விற்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது . தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் . மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சி தேர்வு ( Practice Test / Mock Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள் நுழைவு மற்றும் கடவுச்சொல்லினைப் ( Login ID and Password ) யன்படுத்தி www.trb.tn.nic.in இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது . இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது . மேலும் நழைவுச் சீட்டில் மாவட்டம் / நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . 

தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும் . தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து மேற்கண்ட அறிவுரையை பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது .

Post a Comment

0 Comments